MARC காட்சி

Back
திருமலாபுரம் குடைவரை
245 : _ _ |a திருமலாபுரம் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a குடைவரையின் முகப்பில் இரண்டு தூண்களும் சுவர்ப் பகுதியில் இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. சதுரம், கட்டு, சதுரம் ஆகியவை கொண்டு மகேந்திர வர்மனின் குடைவரைத் தூண்கள் போன்று இத்தூண்கள் காணப்படுகின்றன. தூண்களின் மேல் சதுரத்தில் மூன்று பக்கங்களில் தாமரை மலர்கள் காணப்படுகின்றன. தாமரை மலரின் நடுப்பகுதியில் மகரங்கள் கிழக்குத் தூணின் வடபக்கத்திலும் மேற்குத் தூணிலும் காணப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி குடைவரையில் காணப்படும் மகர அமைப்பை இவை ஒத்துள்ளன. தூண்களின் மீது போதிகை அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இவற்றை அடுத்து உத்திரப் பகுதி உள்ளது. குடைவரையின் முகப்பை அடுத்து முகமண்டபம் நீள்சதுர அமைப்பில் காணப்படுகிறது. முகப்பின் தரையும் முகமண்டபத் தரையும் சமதரையாக உள்ளன. இம்மண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒரு கோட்டமும் தெற்குச் சுவரில் மூன்று கோட்டங்களும் மேற்குச் சுவரில் கருவறையும் உள்ளன. கருவறையின் இருபுற கோட்டங்களில் வாயிற்காவலர்கள் காணப்படுகின்றனர். சிதைவுற்ற நந்தியின் சிற்பம் ஒன்று முகமண்டபத்தில் தாய்ப்பாறையிலேயே குடையப்பட்டு உள்ளது. இம்மண்டபத்தின் கூரையில் அழிவுற்ற நிலையில் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை முற்பாண்டியர் கால கட்டத்தைச் சார்ந்தவையாகும். கிழக்குச் சுவர்க் கோட்டத்தில் நான்முகன் காணப்படுகிறார். தெற்குச் சுவரில் சதுரம், கட்டு, சதுர அமைப்பிலுள்ள அரைத் தூண்களுக்கு இடையே மூன்று கோட்டங்கள் உள்ளன. இவற்றுள் பிள்ளையார், திருமால், ஆடவல்லான் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இச்சுவற்றில் முற்கால பாண்டியர் ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கம்பீரமிக்க அரசனைப்போல் அமர்ந்த நிலையில் உள்ள பிள்ளையார் நான்கு கைகளுடன் காணப்படுகின்றார். கரண்ட மகுடத்துடன் கூடிய சடைமுடியைப் பெற்ற இவர் கைகளில் பரசு, பாசக்கயிறு, கடி, மோதகம் ஆகியவற்றைப் பெற்று விளங்குகிறார். நின்ற கோலத்தில் உள்ள திருமால் மகரகுண்டலங்கள் அணிந்து இருபக்கங்களில் கணங்களுடன் காணப்படுகின்றார். இவர் மேலிரு கைகளில் சக்கரமும் சங்கும் பெற்று கீழிரு கைகளில் கடிமுத்திரையும் வரத முத்திரையும் காட்டி அருள் புரிகின்றார். ஆடவல்லானின் இருபுறமும் பூதகணங்கள் இசைக்கருவியை வாசித்தவாறு காட்டப்பட்டுள்ளன. இவர் பிறையும் மண்டையோடும் சூடி, காதுகளில் பனையோலைக் குண்டலங்களைப் பெற்றுத் திகழ்கின்றார். பிறிதொரு கோட்டத்தில் நான் முகனின் சிற்பம் காணப்படுகிறது. தாமரையில் நின்ற நிலையில் உள்ள இவர் மேலிருகைகளில் அக்கமாலையும் புத்தகமும் கீழிரு கைகளை இடையில் இருத்தியுள்ளார். மார்பிலே முப்புரி நூலும் இடையிலே மடிப்புடன் கூடிய ஆடையும் பெற்று இவர் விளங்குகிறார். கிழக்கு நோக்கிய கருவறையின் தளம் மண்டபத் தளத்தைவிட உயர்ந்து உள்ளது. கருவறையின் உள்ளே தாய்ப்பாறையிலேயே குடையப்பட்ட இலிங்கத் திருமேனி காட்சியளிக்கிறது. சதுர ஆவுடையார் கொண்ட இலிங்கத்தின் அபிஷேக நீர் செல்வதற்கு ஏற்றவாறு பள்ளமொன்று தரையில் வெட்டப்பட்டுள்ளது. கருவறை வாயிற்காவலர்கள் இருவரும் கருவறையை நோக்கி திரிபங்க நிலையில் நின்றுள்ளனர். காதுகளில் பனையோலைக் குண்டலங்களும் கழுத்தில் கழுத்தணிகளும் கைகளில் வளைகளும் இடையில் ஆடைகளும் பெற்று இவர்கள் விளங்குகின்றனர். மார்பிலே முப்புரிநூலும் வயிற்றிலே உதரபந்தமும் பெற்று இவர்கள் காணப்படுகின்றனர். தென் புறக்காவலர் கரண்ட மகுடமும் வடக்கு காவலர் ஜடாமகுடமும் பெற்று விளங்குகின்றார். வாயிற்காவலரில் ஒருவர் தனது கையைத் தடி மீது இருத்தியவாறும் மற்றொரு கையைத் தொங்க விட்டவாறும் காட்சியளிக்கின்றார். பிறிதொருவர் "கடி" முத்திரையைக் காட்டி மற்றொரு கையைத் தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார். முகப்பில் உள்ள கிழக்குத் தூணில் 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபதேவனின் கல்வெட்டு காணப்படுகிறது. சோழாந்தக சதுர்வேதி மங்கலத்தில் இருந்த மாளிகையின், அழகிய பாண்டியன் மண்டபத்திலிருந்தவாறு அரசர் ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. "வாரணாசிபுரம்" என்ற குடியிருப்புப் பகுதியை உருவாக்கியதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு பிற்காலத்தது எனினும் குடைவரை முற்காலப் பாண்டியரின் கலைப்படைப்பாக விளங்குகிறது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர். தற்பொழுது திருமலாபுரம் என்றும் வழங்கப்படுகிறது. அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலைத்தொடரை நோக்கியவாறு அமைந்துள்ள "வண்ணாத்திப் பாறை" என்னும் குன்றில் குடைந்தெடுக்கப்பட்ட கலைக்கோயில்கள் இவையாகும். இங்கு இரண்டு குடைவரைகள் உள்ளன. குன்றின் வடக்கில் உள்ள குடைவரை முழுமையாகவும் தென்பகுதியில் உள்ள இரண்டாவது குடைவரை முற்றுப் பெறாத நிலையிலும் காணப்படுகின்றன. வடபகுதியில் உள்ள முதற்குடைவரை நிலமட்டத்திலிருந்து குன்றின் சரிவான பகுதியில் 2.10 மீ உயரத்தில் குடையப்பட்டுள்ளது. குடைவரையை அடைய இந்தியத் தொல்லியில் பரப்பாய்வுத் துறையினர் தற்பொழுது படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இக்குன்றின் தென்புறத்தில் முற்றுப்பெறாத இரண்டாவது குடைவரை உள்ளது. இக்குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும் சுவரை ஒட்டியவாறு அரைத்தூண்கள் இரண்டும் காணப்படுகின்றன. முகப்பை அடுத்து முகமண்டபப் பணி தொடங்கி முற்றுப்பெறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. குடைவரையின் ஒரு பகுதியில் பிளவு உண்டாகி உள்ளதால் குடைவரை முற்றுப்பெறாத நிலையை எய்திருக்கலாம். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் பராமரிப்பில் இக்குடைவரைகள் உள்ளன.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், திருமலாபுரம், திருமலாபுரம் குடைவரைக் கோயில், திருமலாபுரம் சிவன் குடைவரை, திருநெல்வேலி, தொல்லியல் சி்ன்னம், முற்காலப் பாண்டியர் குடைவரைகள், சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், திருநெல்வேலி மாவட்டத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a திருமலாபுரம் குடைவரை |c திருமலாபுரம் |d தென்காசி |f தென்காசி
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.0733865759773
915 : _ _ |a 77.416931305085
934 : _ _ |a வீரசிகாமணி குடைவரை
995 : _ _ |a TVA_MON_00108
barcode : TVA_MON_00108
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00108/TVA_MON_00108_திருநெல்வேலி_திருமலாபுரம்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00108/TVA_MON_00108_திருநெல்வேலி_திருமலாபுரம்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00108/TVA_MON_00108_திருநெல்வேலி_திருமலாபுரம்_குடைவரைக்-கோயில்-0003.jpg